தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்
ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!
மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்து முடித்துள்ளார்.
‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். டீசர் காட்சியில் ஒருவர், “மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர் ஃபஹத் ஃபாசில்தான். என்ன ஒரு நடிகர்!” என மோகன்லாலிடம் சொல்கிறார்.
அதற்கு மோகன்லால், “ஆனால், இன்னும் மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள்” என்கிறார். அதற்கு, ‘இல்லை. ஃபஹத் மட்டும்தான்” என அவர் சொல்ல, நகைச்சுவையாக மோகன்லால் அந்தக் கதாபாத்திரத்தைக் கடந்து செல்கிறார். இது ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
actor mohanlal's hridayapoorvam movie teaser out