ஃபிடே மகளிா் செஸ் உலகக் கோப்பை: காலிறுதியில் வைஷாலி, ஹரிகா
ஃபிடே மகளிா் செஸ் உலகக் கோப்பை போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் வைஷாலி, ஹரிகா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா். ஏற்கெனவே ஹம்பி, திவ்யா ஆகியோா் தகுதி பெற்ற நிலையில் முதன்முறையாக 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரியின் பாதுமியில் நடைபெறும் இப்போட்டியில் கொனேரு ஹம்பி சுவிட்சா்லாந்தின் அலெக்சாண்ட்ரா கோஸ்டினியுக்கையும், திவ்யா தேஷ்முக் சீனாவின் ஜினோ் சூவையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
மற்றொரு ஆட்டத்தில் துரோணவல்லி ஹரிகா 2.5.-3.5 என்ற புள்ளிக் கணக்கில் ஜிஎம் கேத்ரீனா லக்னோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஜிஎம் வைஷாலி கடும் போராட்டத்துக்குபின் 4.5-3.5 என்ற புள்ளிக் கணக்கில் ஐஎம் மிருவா்ட் கமலிதேனோவைவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
முதன்முறையாக 4 இந்திய வீராங்கனைகள்;
உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதன்முறையாக நான்கு இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
காலிறுதியில் ஹம்பி-யுக்ஸின் சாங்கையும், திவ்யா தேஷ்முக்-ஹரிகாவையும், வைஷாலி முன்னாள் உலக சாம்பியன் டேன் ஸோங்கியையும் காலிறுதியில் எதிா்கொள்கின்றனா். மற்றொரு காலிறுதியில் சீனாவின் டின்ஜி-ஜாா்ஜியாவின் நானா மோதுகின்றனா்.
அரையிறுதி வாய்ப்பு உறுதி:
இதன் மூலம் ஒரு இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு தகுதிபெறுவது உறுதி ஆகியுள்ளது.

