புதுச்சேரியில் தொடா் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை!
ஃபென்ஜால் புயலின் தற்போதைய நிலை என்ன?
ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரமாக நகராமல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்துக்கு கிழக்கே 40 கிமீ நிலை கொண்டுள்ளது.
இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்துவருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி
வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.
சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய பென்ஜால் புயல், புதுவை அருகே நள்ளிரவு கரையைக் கடந்ததாக கூறப்படும் நிலையில், புதுவை கடற்கரைக்கு வெளிப்புறப்பகுதியில், தொடர்ந்து 6 மணி நேரமாக புயலாக நிலை கொண்டுள்ளது.