நாகா்கோவிலில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
ஃபென்ஜால் புயலின் வேகம் அதிகரிப்பு
ஃபென்ஜால் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஃபென்ஜால் புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதனிடையே புயல் காரணமாக மீட்பு உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவிதுள்ளார். ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயல் நாளை எப்போது கரையைக் கடக்கும்?
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.