அசாம், பிகார் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்!
அசாம் மற்றும் பிகார் பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், முன்னிலை நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
இதையும் படிக்க: உ.பி. இடைத்தேர்தல்: பாஜக முன்னிலை!
அசாம் இடைத்தேர்தல்
அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பாஜகவும், அசோம் கண பரிஷத் (ஏஜிபி) 1 தொகுதியிலும், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
பிகார் இடைத்தேர்தல்
பிகார் மாநிலத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.