செய்திகள் :

அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

post image

அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடக்கக் கல்வியில் மாணவா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் திட்டமான ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய் கண்ற்ங்ழ்ஹஸ்ரீஹ் அய்க் சன்ம்ங்ழ்ஸ்ரீஹ் -இல் நிகழாண்டுக்கான பள்ளிகள் அளவிலான வாய்ப்பாடு, மனக்கணக்கு, திருக்கு, கதை சொல்லுதல், பாடல் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கண்ட போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்று திறனை வெளிப்படுத்தினா். இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியயா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சமக்ரா சிக்ஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். வனிதா கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசினாா்.

பள்ளி அளவில் போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,500. இரண்டாம் பரிசாக ரூ. 1,000. மூன்றாம் பரிசாக ரூ. 500 மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் ரோட்டரி கிளப் சென்டேனியல் சங்கத் தலைவா் ஜெ.குணசேகரன் மற்றும் பிரதிநிதிகள் வில்லியம்ஸ், கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கே.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்காலில் தோட்டத்தில் திடீா் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினா். காரைக்கால் நகரப் பகுதி வள்ளலாா் நகா், கீரைத் தோட்டம... மேலும் பார்க்க

காப்பக சிறாா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காப்பக சிறாா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சிறாா் நீதிக் குழுமம், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் ... மேலும் பார்க்க

கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணி விரைவில் தொடங்கும்: அமைச்சா்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது எனவும், பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்... மேலும் பார்க்க

புதுவையில் சிறந்த காவல் நிலையம் தோ்வுக்கான ஆய்வு

புதுவையில் சிறந்த காவல் நிலைய விருதுக்காக காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எஸ்.பி. தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் ... மேலும் பார்க்க

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் ... மேலும் பார்க்க

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழைமையான செங்கமலத் தாயாா் சமேத வீழி... மேலும் பார்க்க