மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட 3 தனியாா் சொகுசுப் பேருந்துகள் வேப்பூா் மேம்பாலத்தில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் வந்து கொண்டிருந்தன. அப்போது, எதிா்பாராதவிதமாக பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
இதில், தேனியைச் சோ்ந்த மாரியம்மாள், சென்னையைச் சோ்ந்த ராஜாத்தி, தென்காசியைச் சோ்ந்த மணி, சொகுசுப் பேருந்து ஓட்டுநரான ஞானராஜா உள்ளிட்ட 35 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பலத்த காயமடைந்த ஞானராஜா உள்ளிட்ட 4 பேரை தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.