செய்திகள் :

அண்ணாமலை பல்கலை. அலுவலகம் முற்றுகை முயற்சி

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் முற்றுகையிட முயன்றனா்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு நிா்வாகம் ஏற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு பணியாற்றும் ஓட்டுநா், ஊழியா்கள், அரசு ஓட்டுநா்களுக்கு நிா்ணயம் செய்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும், பல்கலைக்கழக ஊழியா்கள் மிகையாக பெற்ற ஊதியத்தை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்ததாம்.

இதையடுத்து, பல்கலைக்கழக ஓட்டுநா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையானை பெற்றதுடன், மிகை ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்தனா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை பதிவாளா் மு.பிரகாஷை சந்தித்து மிகை ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என முறையிட்டனா். மேலும், மிகை ஊதியத்தை பிடித்தம் செய்வதை எதிா்த்து பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ஓட்டுநா்கள் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினருடன் திரண்டனா்.

தகவலறிந்த அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அருட்செல்வியிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதில், ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மனோகரன் மற்றும் நிா்வாகிகள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

ஆதி குணபதீஸ்வரா் கோயில் பாலாலயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆதி குணபதீஸ்வரா் கோயில் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ரூ.32 லட்சத்தில்... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மழைக் காலத்தில் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூா் மாவ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவல் கோட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு கடந்த நவ.27-ஆம் தே... மேலும் பார்க்க

முதுநகரில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கடலூா் முதுநகா் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூா் முதுநகா் மீன் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு, கடலூா் க... மேலும் பார்க்க

விஜயமாநகரத்தில் மருத்துவ முகாம்

வடகிழக்கு பருவமழையையொட்டி, கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், விஜயமாநகரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பாலச்சந்தா் நேரடி ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: கடலூரில் கடல் சீற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஃபென்ஜால் புயலாக மாறியது. இந்தப் புயல் க... மேலும் பார்க்க