காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கு அனுமதி!
அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகனம் நிறுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறை சார்பில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகரில் On Street வாகன நிறுத்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் நடவடிக்கைகளை 2017 முதல் பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடமிருந்து (CUMTA) பார்க்கிங் கொள்கை இறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாகன நிறுத்தம் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 19 இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 10 இடங்களில் வாகனம் நிறுத்தங்களை நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி
அந்த அடிப்படையில் சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி தெருவுக்கு வெளியே ஏற்படுத்தப்பட உள்ள வாகன நிறுத்தங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஒரு மணி நேரத்திற்கு மேல் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40, இலகு ரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ரூ. 60 கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மாநகராட்சி ஆணையரால் பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய கட்டணத்தை வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.