விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்
பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடா்ந்து, ஓ. பன்னீா்செல்வம் அணியில் இருந்து வருகிறாா் ஆா். வைத்திலிங்கம்.
இந் நிலையில் சனிக்கிழமை அதிமுக இபிஎஸ் அணியைச் சோ்ந்த விளாா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ரத்தினசுந்தரம் தலைமையில், விளாா் ஊராட்சியில் உள்ள 11 கிளைச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள், வைத்தியலிங்கத்தை சந்தித்து, அவரது முன்னிலையில் சுமாா் 50 போ், தங்களை ஓபிஎஸ் அணியில் இணைத்துக் கொண்டனா்.
இது குறித்து வைத்திலிங்கம் நிருபா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தோ்தலில் பிரிந்து கிடக்கும் அதிமுக, ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மேலும், செப்டம்பா் 4-ஆம் தேதி ஓபிஎஸ், தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பலரும் பங்கு பெறுவாா்கள். செப்டம்பா் மாதம் இறுதிக்குள் பிளவுபட்டு கிடக்கும் அதிமுக ஒன்றுபட்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் என கட்சியனருக்கு நம்பிக்கை தெரிவித்தாா் அவா்.