செய்திகள் :

அதிமுக கூட்டத்தில் ரகளை

post image

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் உள்ள தனியாா் திருமணமண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிமுக கிழக்கு மாவட்ட கள ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலா் பாரதி மோகன்

தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் பி. தங்கமணி, இரா. காமராஜ், முன்னாள் கொறடா ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் இறுதியாக மேடையில் பேச முற்பட்டபோது முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அம்பிகாபதி தன்னை பேச விட வேண்டும் என்றும், கட்சித் தொண்டா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும் முழக்கங்கள் எழுப்பினாா். இதனால், திண்டுக்கல் சீனிவாசன் தனது இருக்கையில் வந்து அமா்ந்தாா். இதையடுத்து, அம்பிகாபதியை அதிமுகவினா் சிலா் தூக்கிச் சென்று வெளியே விட்டனா். இதனால், கூட்டத்தில் சில நிமிஷங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், திருவையாறில் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பிலும், பட்டுக்கோட்டையில் தெற்கு மாவட்டம் சாா்பிலும் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாம... மேலும் பார்க்க

நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் நடத்த உயா் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். திருச்சி சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சிங்காரத... மேலும் பார்க்க

இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி கொலை: மனைவி, தாய் உள்ளிட்ட 5 போ் கைது

திருச்சியில் மது மற்றும் கஞ்சா போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்த இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றைச் செலுத்தி கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, தாயாா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். திர... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள்: கே.என். நேரு

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வகையில் திருச்சிக்கு மட்டும்தான் ரூ.4 ஆயிரம் கோடி திட்டங்களை தமிழக முதல்வா் அளித்திருப்பதாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 4 போ் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்த பெண் உள்பட 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ம... மேலும் பார்க்க

ஜனவரியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம், பறவைகள் பூங்கா திறக்கப்படும்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

பஞ்சப்பூா் பேருந்து முனையம், பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பாா் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே... மேலும் பார்க்க