செய்திகள் :

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

post image

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார்.

ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லீமா ரோஸ்
லீமா ரோஸ்

இந்த வழக்கின் மூளையாகச் செயல்பட்டவர் ஜான் பிரிட்டோ என அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. காரணம், ஜான் பிரிட்டோ தவெகவின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏவுமான லீமா ரோஸின் சகோதரர் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்திருக்கிறார்.

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " மாரிதாஸ் என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பிக்கொண்டே இருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு. அது நான் இல்லை.

ஜான் பிரிட்டோ
ஜான் பிரிட்டோ

என் மீது ஆதாரமின்றி பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்கள் பெயரை கெடுப்பதற்காகவே இதுபோன்ற விஷயங்களை செய்கிறார்கள்.

தவறான செய்திகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய தொழில் பாதிக்கிறது. என் மீது போதைப் பொருள் வழக்கு எதுவும் இல்லை." என்று கூறியிருக்கிறார்.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச... மேலும் பார்க்க

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள... மேலும் பார்க்க

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைப் பார்... மேலும் பார்க்க

"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று இன்று (ஜூன்.9) சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி, " சமூகநீதி க... மேலும் பார்க்க

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க