``அந்த நாளும், மகிழ்ச்சியும்... அப்படியே இருந்திருக்கலாம்'' - குடும்ப தலைவியின் பகிர்வு| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
ஒரு வீடு என்பது எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதென்றால், என்னைப் பொறுத்தவரையில், பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடும் பொழுதுகளிலும், கதைகள் கேட்கும் நேரத்திலும் தான்.
எனக்கு என் சிறுவயதில் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடிய நினைவுகள் இல்லவே இல்லை. ஆனால் என் குழந்தைகளுக்கு ஏராளமான பொம்மைகள் வைத்து விளையாடிய அனுபவங்கள் இருக்கின்றன. அவர்கள் அதை நினைவில் வைத்திருக்கின்றார்களா என எனக்குத் தெரியாது.. ஆனால் அவர்களின் பொம்மைகளும், அவர்கள் அவற்றை வைத்து கதைகள் பேசியதும் எனக்கு நினைவில் இருக்கின்றன.
முதல் குழந்தை பெண் என்பதால், என் மகளிடம் ஆயிரெத்தெட்டு பார்பி ரக பொம்மைகள் இருந்தன. அவற்றை அவளும் அவளின் சகாக்களும் குளிப்பாட்டி, சீராட்டி, உணவூட்டி என நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். இவர்களின் அத்தனை கலாட்டாக்களுக்கும் அந்த பொம்மைகள் எப்போதும் போல் சிரித்தபடியே இருக்கும்.
ஒரு கட்டத்தில் பொம்மைகள் பழசாகி, புதிது புதிதாக வேறு பொம்மைகள் வந்து சேரும். ஒவ்வொரு புது பொம்மைக்கும் ஒவ்வொரு பெயர்.
அடுத்ததாக பிறந்த மகனுக்கு எப்போதும் கார்களின் மீதே கவனம். எல்லா வித கார்களின் மினியேச்சர்களும் அவனிடம் இருக்கும். அந்தக் கார்களை ஓட்டியபடியே அவனின் நாள்கள் நகரும்.
வீட்டில், நெடுஞ்சாலை போலவே ஒரு இடத்தை தயார் செய்து, அதில் வாகனங்கள் செல்வது போலவும், மேம்பாலங்கள் அமைத்து அதன் மேலும் வாகனங்களை ஓட்டியும் , தனக்குத் தானே பேசிக் கொண்டு பொம்மை கார்களை அவன் ஓட்டிக் கொண்டிருப்பான். அவன் அவற்றை வைத்து விளையாடும்போது, ஒரு கார் எப்படி வேகமாக செல்கிறது? எதிரில் வரும் காரை மோதாமல் எப்படி தப்பித்துக் கொள்கிறுது? ரிவர்ஸ் செல்கையில் எப்படி லாவகமாக செல்ல வேண்டும் என்பதையெல்லாம் , கார்களை போலவே ஒலி எழுப்பி ஓட்டிக் கொண்டிருப்பான்.
அவர்களுக்கு கொஞ்சம் குழந்தைத்தனம் நீங்கியபின் பொம்மைகள் என்பதே வீட்டில் இல்லாமல் போனது.
இங்குமங்குமாக இரண்டு மூன்று டெடி பியர்கள் இருந்தன அவ்வளவுதான். அவையும் சென்ற ஆண்டு வீடு மாறியபின் இல்லாமல் போயின.
இன்று வீடு முழுக்கத் தேடினாலும் ஒரு சின்ன சைஸ் பொம்மை கூட இல்லை.
தற்போதைய நாள்களில் என் வீட்டிற்கு எந்தக் குழந்தையும் வருவதில்லை. ஆனால் நினைத்துக் கொள்வேன், திடீரென ஏதாவது குழந்தை வந்தால் அதனிடம் விளையாடுவதற்கு கொடுப்பதற்கு ஒரு பொம்மை கூட இல்லையே என..
குழந்தைகள் குழந்தைகளாக இருந்த காலத்தில், அவர்கள் விளையாடி முடித்தபின், அந்த பொம்மைகளை எல்லாம் எடுத்து வேறிடத்தில் அடுக்கி வைப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும்.
நினைத்துப் பார்க்கையில், அந்த நாள்களும், அவை தந்த மகிழ்ச்சியும்.. அப்படியே இருந்திருக்கலாம் போல... பொம்மைகளே இல்லாத இந்த தற்போதைய வாழ்க்கை முறைக்குப் பதிலாக.
வாழ்க்கையில் நாம் எப்போதும் நாளை நாளை என்ற ஒன்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம்.
ஆனால் நேற்றைய, முடிந்து போன வாழ்க்கையே, பல நேரங்களில் நன்றாக இருந்திருக்கிறது.. அந்த நேரங்கள் இனிமையானவை என நம்மால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...