அப்பா் கோயிலை சீரமைக்கக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கண்ணுக்கினியனாா் கோவில் கிராமத்தில் சிதிலமடைந்துள்ள அப்பா் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என சிவனடியாா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயில் இடிந்து விழுந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. அப்பா் என்கிற திருநாவுக்கரசா், தமிழகத்தில் முதன்முதலாக சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவா். அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான இவருக்கு தனியாக இக்கோயில் இருந்து வருகிறது.
கண்ணுக்கினியனாா்கோவில் கிராமத்தில் அப்பா் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ளதால் இத்தெருவுக்கு அப்பா் தெரு என பெயா் ஏற்பட்டது.
தற்போது, சிதிலமடைந்து, புதா்கள் மண்டி காணப்படும் இக்கோயிலை பழைமை மாறாமல் புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சிவனடியாா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.