முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!
அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !
அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது.
நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை 20ஆவது கட்டமாக 4,388 பேர் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பனிலிங்கத்தைக் காண புறப்பட்டுள்ளனர். 115 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 2,815 பக்தல்கள் பஹல்காமிற்கு புறப்பட்டாலும், 95 வாகனங்களில் 1,573 பக்தர்கள் பால்தால் பாதையை விரும்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது! 4 பேர் பலி!
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, யாத்திரை இரண்டு வழித்தடங்களிலும் சீராக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 3 லட்சத்தைத் தாண்டும். 130 சாதுக்கள் மற்றும் சாத்விகள் அடங்கிய புதிய பக்தர்கள் குழு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் பஹல்காம் மற்றும் பால்தாலுக்கு தனித்தனி அணிவகுப்புகளில் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டனர்.
இதுவரை, 2.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இயற்கையாகவே உருவான பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டனர்.