திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு வரவிருந்தார்.
தமிழ்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு வலுவாகி வரும் நிலையில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக கல்வித்துறை இணையமைச்சர் சுகந்த மஜும்தார் விழாவில் பங்கேற்கவிருக்கிறார்.
இதையும் படிக்க | பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதும் என பாஜக தவிர்த்து மற்ற அரசியல் கட்சியினர் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்வி நிதியை வழங்காத மத்திய அரசுக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்