மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை... பந்த்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானியில் அம்பேத்கர் சிலை அருகில் நின்று கொண்டு, சோபன் பவார் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்ததாக தெரிகிறது. ரயில் நிலையம் அருகில் நடந்த இச்சம்பவம் குறித்து நகர் முழுவதும் தகவல் பரவியது.
உடனே சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் கூடி நின்று கோஷமிட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டை வீசி கூட்டத்தை கலைத்தனர். இது குறித்த செய்தி நகர் முழுவதும் பரவி வன்முறை ஏற்பட்டது. இதனால் நேற்று பர்பானி மாவட்டத்தில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பந்த்தின் போது மர்ம நபர்கள் கற்களை வீசி வாகனங்களை சேதப்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து தண்டவாளத்தில் 30 நிமிடத்திற்கும் மேல் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை ரயில்வே போலீஸார் அப்புறப்படுத்தினர். நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பர்பானியில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்கும் வகையில் 163வது சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி ரகுநாத் தெரிவித்துள்ளார்.