முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!
அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்
அரசியல் மற்றும் அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ராக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். ஆனால், தேர்தல் பிரசார வசனங்களை அல்ல.
என் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சித் தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் என்று பேசியருக்கிறார்.
அவர் சிரித்தபடி, மிக சாதாரண உடல் அசைவுகளுடன் மக்களிடையே பேசும் விடியோவையும் அமெரிக்கா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கத்துக்கு நேர்மாறாக ஒரு மஞ்சள் நிற துண்டை எலான் மஸ்க் அணிந்திருப்பது, நம்ம ஊர் மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் போல தோளில் துண்டுபோட்டிருப்பதாக பலரும் அந்த விடியோவில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா் ‘டெஸ்லா’ நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க். அதிக நிதியும் அளித்தார். அதிபா் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக 2-ஆவது முறை பொறுப்பேற்றாா்.
டிரம்ப் நிா்வாகத்தில், எலான் மஸ்க் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனால், அவ்வாறே நிலைமை நீடிக்கவில்லை. டிரம்ப் நிா்வாகத்தால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
Elon Musk never wanted to be in politics. He builds rockets, cars, and tools for the future—not campaign slogans. But when the system became too broken to ignore, he didn’t stay silent.
— News America Party (@AmericaPartyX) July 18, 2025
“The stakes are so high that I had no choice but to take a stand.”
That stand is called the… pic.twitter.com/PQ1kGNd577
அமெரிக்க அமைச்சரவையிலிருந்து வெளியேறிய எலான் மஸ்க், புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்து கேட்டு, தன்னடைய எக்ஸ் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினாா். அப்போது 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் கட்சித் தொடங்க ஆதரவளித்தனா்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்தி, அதில் 65.4 சதவீதம் பேர், ஆம் (கட்சித் தொடங்க வேண்டும்) என்று விருப்பம் தெரிவித்தனா். அதன்பிறகே, புதிய கட்சி அறிவிப்பை எலான் மஸ்க் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட்டிருந்தார்.
தொழிலதிபர் எலான் மஸ்கின் இந்தப் புதிய கட்சி, அமெரிக்க அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.