செய்திகள் :

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?

post image
சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இருவரும் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்றுதான் முன்பு அவரை விமர்சித்தேன்.

சீமான்

இந்தக் களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும்போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருப்பதும் அரசியல்தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளைப் போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை சங்கி என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். தி.மு.க-வை எதிர்த்தாலே சங்கி என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். சீமானின் இந்த பதில் அடுத்த விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதற்கு பொதுக்கூட்டத்தில் விளக்கம் கொடுத்த சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள். நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை, பரந்தூரில் விமான நிலையம், காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்" என கொதித்தார்.

வானதி சீனிவாசன்

சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், "காவி என்பதை சீமான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பா.ஜ.க-விற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்?" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டத்தைக் கலைஞர் கொடுத்தார். கிருபானந்த வாரியார் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை கொடுத்தார். எனவே பட்டங்கள் மற்றவர்களால்தான் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு நாமே பெற்றுக்கொள்வது பட்டமாக இருக்காது. இந்த விஷயத்தில் வானதி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது" என்றார்.

தராசு ஷ்யாம்

ஆனால், 'சீமானின் இந்த கருத்து விஜய்யை சீண்டும் வகையில் இருக்கிறது' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஏற்கெனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ரஜினிக்கும், விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது. இந்தசூழலில்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார் சீமான். இதன் மூலமாக விஜய்யை ஓரம்கட்டுகிறார். இந்த பேச்சு விஜய் மற்றும் அவரது ரசிகர்களை வெறுப்பேத்தும் வகையிலும், வம்புக்கு இழுக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும் அரசியல் சூப்பர் ஸ்டார் என தன்னை எப்படி சீமான் சொல்லிக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. தனியாக தேர்தலை சந்தித்து 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ப்ரியன்

எனவே தனித்துவமான அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் சூப்பர் ஸ்டார் என்றால் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், தேர்தல்களில் அதிக வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

இதையெல்லாம் தமிழக அரசியலில் சீமான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனவே அவர் இவ்வளவு சீக்கிரமாக அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குத் தகுதியுடைவராக இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதுதான். தன்னைத்தானே அரசியல் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வது அவரது தன்னம்பிக்கையாக இருக்கலாம். பிறர் அதை நாகரீகமான விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை சீமான் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

முசோலினியின் சிறையில் நடந்த சம்பவங்கள்… | History | Mussolini Web series #10

சிறைச்சாலைகள் பாடசாலைகளாக இருக்க வேண்டும் ஆனால் முசோலினியின் ஆட்சியில், சித்திரவதை சாலைகளாக இருந்தன. அத்தனை அத்தனை படுகொலைகள், வன்முறைகள். இதை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர். முசோலினியின... மேலும் பார்க்க

மும்பை: 40 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் காளிதாஸ்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பாரா?

மும்பை வடாலா தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருப்பவர் காளிதாஸ் கோலம்பர். இப்போது 9வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த 40 ஆண்டு எம்.எல்.ஏ.பதவியை காளிதாஸ் ஒரே கட்சியில... மேலும் பார்க்க

அதிமுக Vs திமுக: சொத்து வரி உயர்வுக்கு யார்தான் காரணம்?

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் அடுத்தடுத்து சொத்து வரி உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்த... மேலும் பார்க்க

Bangladesh: வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து மதத் தலைவர் கைது; தொடரும் போராட்டங்கள்; பின்னணி என்ன?

வங்காளதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் மற்றும் கலவரத்தின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு அமைந்தது. அதேசமயம், போராட்டம் முடிந்த பிற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நாட்டு மாடுகளைக் காக்க மாரத்தான்; விலங்கு பொம்மைகளுடன் ஓடிய அரசுப் பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் ஜல்லிக்கட்டு நாட்டுமாடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறு... மேலும் பார்க்க