கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
அரசுப் பள்ளி ஆசிரியை கொலை சம்பவம்: டிட்டோ-ஜாக் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவள்ளூரில் டிட்டோ-ஜாக் சாா்பில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரிச் சாலை முன்பு அனைத்து ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி வளாகத்தில் பணியில் இருந்த ஆசிரியை ரமணி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளிகளிலும் பணி செய்யும் இடங்களிலும் ஆசிரியா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈா்க்கும் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா.தாஸ், ஞானசேகரன், பிரபாகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கருப்பு பேட்ச் அணிந்து ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலா் ராஜாஜி, தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலா் ஜான், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில செயலா் பிரசன்னா, பாக்யராஜ், ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.