செய்திகள் :

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

post image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அவரைப் பார்ப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமைச்சர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் நசீர் ராஜா மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மா ஆகியோர் இரு பிரிவுகளாக வேலை செய்து வந்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மா அவரது ஆதரவாளர்களை மட்டும் அமைச்சரைச் சந்திக்க உள்ளே அனுமதிப்பதாக எதிர் தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனால் அமைச்சரைப் பார்க்க வந்தவர்களுக்கும், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹோட்டல் உள்ளேயே அமைச்சரைப் பார்க்க வந்த திண்டுக்கல் தொகுதி த.வெ.க வேட்பாளர் நசீர் ராஜா பிரிவைச் சேர்ந்த தொண்டர்கள் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில், `எங்கள்மீது கை வைத்த மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும்' என்றும், `அவதூறாகப் பேசிய மாவட்டச் செயலாளரை மாற்று' என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர்  அமைச்சரைப் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறி, சமதானப்படுத்தினர்

அமைச்சர் விக்னேஷ்

தொடர்ந்து மாலையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், கரூர் எம்.பி., ஜோதிமணி, நிலகோட்டை எம்.எல்.ஏ அய்யனார், மாவட்ட எஸ்.பி., பிரதீப் மற்றும் அதிகாரிகள்  உள்ளிட்டோர் அமர்ந்திருந்த வரிசையில், தவெக மாவட்டச் செயலாளர் தர்மாவிற்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கக்கூடிய கூட்டத்தில் எந்த அடிப்படையில் மாவட்டச் செயலாளர் அமர்ந்திருந்தார் என்ற பேச்சுகள் கூட்டத்திற்குள் இருந்த அதிகாரிகளிடையே எழுந்தது.

இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. முந்தைய ஆட்சியில்கூட மக்கள் பிரதிநிதிகளைத் தவிர கட்சியில் இருந்த யாரும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை; ஆனால் இப்போது ஆய்வுக் கூட்டமே த.வெ.க-வின் கட்சி நிகழ்ச்சி போல் தான் நடக்கிறது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டது. மேலும் இது தவறான முன்னுதாரணம் எனவும் பேச்சுகள் எழுந்தது.

கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மா

இந்த விவகாரம் குறித்து த.வெ.க -வின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மாவிடம் விளக்கம் கேட்டோம், ``ஆய்வுக் கூட்டத்திற்கு அமைச்சருடன் செல்லும்போது நான் நின்று தான் இருந்தேன். யாரோ ஒருவர் வந்து சேர் காலியாக இருக்கிறது அமருங்கள் எனச் சொன்னார். நான் ஐந்து நிமிடங்கள்கூட அமரவில்லை. உடனே எழுந்து பின்புறம் சென்று அமர்ந்து கொண்டேன். கூட்டத்தில் நான் முழுவதுமாகக்கூட இல்லை... பாதியிலேயே வந்துவிட்டேன். என்னை எதிர்த்து தொண்டர்கள் கோஷமிட்டது பற்றி எனக்கு தெரியாது அதை விசாரிக்கிறேன்” என்றார்.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச... மேலும் பார்க்க

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள... மேலும் பார்க்க

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார். ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழ... மேலும் பார்க்க

"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று இன்று (ஜூன்.9) சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி, " சமூகநீதி க... மேலும் பார்க்க

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க