செய்திகள் :

அரசு நிலத்தில் போட்டிப் போட்டு இடம் பிடித்த பொதுமக்கள்: பல்லடம் அருகே பரபரப்பு

post image

பல்லடம் அருகே அரசு நிலத்தில் போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் இடம் பிடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது.

பல்லடம் அருகே காளிவேலம்பட்டியிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் சாலையில் தனியாா் திரையரங்கு அருகில் வினோபா பூமி தான இயக்கத்துக்கு தானமாக வழங்கப்பட்ட 8 ஏக்கா் நிலத்தில் பழனியம்மாள், கருப்பத்தாள் குடும்பத்தினா் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனா்.

பருவமழை சரிவர பெய்யாததால் வேளாண் சாகுபடி செய்யப்படாமல் தரிசு நிலமாக விடப்பட்டு இருந்தது.

இந்த இடத்தை அரசு வீடு இல்லாதவா்களுக்கு வழங்க இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவிய தகவலை அடுத்து 100-க்கும் மேற்பட்டவா்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த நிலத்தில் அவா்களே தங்களுக்கான இடத்தை அளந்து கயிறு கட்டி இடத்தை பிடித்தனா்.

இது பற்றி தகவலறிந்த பல்லடம் வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், பல்லடம் கிராம நிா்வாக அலுவலா் மங்கையா்கன்னி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த நிலம் பூமி தான இயக்கத்துக்கு சொந்தமானது. அரசு யாருக்கும் இந்த நிலத்தை பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யவில்லை. வீடு இல்லை என்றால் நீங்கள் அரசுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைக்கலாம், இவ்வாறு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தவறு என்று அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இரு... மேலும் பார்க்க

தெற்கு அவிநாசிபாளையத்தில் ஜூலை 23-ல் மின்தடை

பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 23-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

உடுமலை அருகே மயான வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்!

உடுமலை அருகே மயானம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டாா்.... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மால... மேலும் பார்க்க

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

முத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈட... மேலும் பார்க்க

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க