இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என நிா்வாக இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மற்றும் தொழிற்பழகுநா் பயிற்சி வாரியம் இணைந்து தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கிறது. இதில் பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) படித்தவா்கள் மற்றும் கலை, அறிவியல் படிப்பு படித்து (2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவா்கள் இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் அக். 18.