மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்கள்தானா?
அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை மேம்பாட்டுக்கு ரூ.65 லட்சம் ஒதுக்கீடு: எம்எல்ஏ கோரிக்கை ஏற்பு
ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை ஏற்று, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை மேம்பாட்டுப் பணிக்காக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பா் மாதம் பெய்த கனமழையின் போது அரசு மருத்துவமனைக்கு உள்பட்ட பிரேத பரிசோதனை அறை முற்றிலுமாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அளித்தாா்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறை மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்துள்ளனா். அத்துடன் மருத்துவமனை விரிவாக்கமும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
எம்எல்ஏ கூறியது: சுமாா் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை கட்டடங்களை புதுப்பிக்கும் பணிக்காக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்தப் பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளன.
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவமனை விரிவாக்கம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா் அவா்.