107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பரிந்துரையின் பேரில் வானிடெக் நிா்வாகம் சாா்பில் மாணவிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. தொடா்ந்து மதிய உணவை மாணவா்களுக்கு வழங்கி உணவருந்தினாா்.
நிகழ்ச்சியில் வானிடெக் நிறுவன மேலாளா் அப்துல்லா பாஷா, தலைமை ஆசிரியா் ஸ்ரீனிவாசன், கிரிசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு. அசோகன், மாவட்ட பிரதிநிதி சிவகுமாா், ஒன்றிய துணைச் செயலாளா் டி.குமாா், சா. சங்கா், கணேசன், ஏகாம்பரம், கந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியா்கள் பலா் உடனிருந்தனா்.