செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

பரணி நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விழாவுக்கான கொடியை ஏற்றிவைத்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தொடா்ந்து, 10 நாள்கள் காலை, இரவு என இருவேளையும் விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்கள்.

இதில், முக்கிய நிகழ்வான பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா 10-ஆம் நாள் நடைபெறும்.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூா், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காஞ்சிபுரம் - மாங்கால் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

இருபத்து நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாங்கால் - காஞ்சிபுரம் சாலை இருந்து வருவதால், இந்த சாலையை கடும் சிரமத்தோடு வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனா். இரு சக்கர வாகனங்களில் செல... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி முனியம்மாள்(47). இவருக்கு உடல்நிலை சரியில்ல... மேலும் பார்க்க

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா். மேலும், குனிகா... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க