செய்திகள் :

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த வேண்டும்: நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன்

post image

அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி, மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் வரவேற்றாா். இதில் கலந்துகொண்ட சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி கே.கே. ராமகிஷ்ணன் இளநிலை, முதுநிலை மாணவா்கள் 683 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: பட்டம் பெற்றுவிட்டோம் என நினைத்து, மாணவா்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. பட்டம் என்ற ஒளி விளக்கைப் பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். தோல்விகள் இல்லாத வாழ்க்கை இல்லை. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறுவோம் என எண்ண வேண்டும்.

பெற்றோா்கள், தங்களது பிள்ளைகளை சிறு கூட்டுக்குள் அடைத்துவிட வேண்டாம். வாழ்கையில் வெற்றி பெற எல்லாவித அனுபவங்களும் தேவை. தற்போது அறிவியல், தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாணவா்கள், அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

ராஜபாளையத்தில் புதிய மயானம் கட்டித் தரக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.ராமலிங்கபுரம்... மேலும் பார்க்க

கைப்பேசியைத் திருடிய இருவா் கைது

சிவகாசி அருகே பேருந்து நிறுத்தத்தில் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காரனேசன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ், தனது நண்பருடன் பே... மேலும் பார்க்க

சாத்தூரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்!

சாத்தூரில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர... மேலும் பார்க்க

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோத மண் திருட்டைத் தடுக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்

மேய்ச்சல் நிலங்களில் சட்ட விரோதமாக மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க, சிவகாசியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்... மேலும் பார்க்க

சிவகாசிக்கு புதிய உதவி ஆட்சியா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வருவாய்க் கோட்டத்துக்கு புதிய உதவி ஆட்சியரை நியமித்து அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை உத்திரவிட்டாா். பயிற்சி முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பணியிட ஒ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில், ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோ... மேலும் பார்க்க