செய்திகள் :

அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

post image

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார்.

என்ன மசோதா?

சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்திற்குப் பிறகு வரும் அலுவலகம் சார்ந்த போன் கால், மெசேஜ், இ-மெயில் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை.

இதை 'Right to Disconnect, 2025' என்று முன்மொழிந்துள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான பேலன்ஸ் இந்த மசோதா மூலம் அடையலாம்‌ என்று சுப்ரியா சுலே கூறுகிறார்.

இந்த மசோதா சட்டமாக மாறும் போது, அலுவலகங்கள் இந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது, இதை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்... தண்டனையும் வழங்கப்படலாம்.

இது தேவையா?

இன்றைய டிஜிட்டல் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான‌ ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக நேரம் தாண்டியும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டிற்கு சென்றும் அலுவலக வேலைகளைத் தொடர வேண்டியதாக உள்ளது.

ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது வொர்க் லைஃப் - பெர்சனல் லைஃப் பாதிப்பைத் தருகிறது.

இவற்றை இந்த மசோதா சட்டமானால் தடுக்கலாம்.

இந்த மசோதா குறித்தும், இது சட்டமாவது குறித்தும் நீங்கள்‌ என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album

புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள்... மேலும் பார்க்க

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

"ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள்" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மதுர... மேலும் பார்க்க

”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொ... மேலும் பார்க்க

``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்ட... மேலும் பார்க்க

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவற... மேலும் பார்க்க