சொக்கம்புதூரில் மயான கொள்ளை: மனித எலும்பை வாயில் கடித்து நடனமாடிய பூசாரி!
அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!
அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : 10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி
அஸ்ஸாம் மாநிலம் மோரிகான் நகரை மையமாக கொண்டு 16 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவாஹத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிஸா மாநிலம் புரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கொல்கத்தா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.