மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
அ.வல்லாளபட்டியில் மாசி களரி திருவிழா சாமியாட்டம்
மேலூா் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி சிலிப்பிபட்டியில் அமைந்துள்ள திருமலைசுவாமி, கரடி கருப்பணசுவாமி கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சாமியாட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி, கிராம உறவின் முறையினரும், சாமியாடிகளும் அழகா்கோவில் மலை மேலேயுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் கடந்த 24-ஆம் தேதி புனித நீரடி விரதத்தைத் தொடங்கினா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பச்சை பரப்புதல் நிகழ்வு நடைபெற்றது.
புதன்கிழமை சுவாமிக்கு பால்சாதம் படைத்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னா், சாமியாடிகள் திரி எடுத்து சாமியாட்டம் ஆடினா்.
வியாழக்கிழமை (பிப்.27) கிடாய் வெட்டி சுவாமிக்கு படைக்கும் நிகழ்வும், 28-ஆம் தேதி அம்மனுக்கு கரகம் எடுத்து சாமியாடும் நிகழ்வும் நடைபெறும். 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாசி களரி திருவிழாவில் சிலிப்பிட்டி கிராமப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.