செய்திகள் :

ஆசிய கோப்பையில் நீடிக்கிறது பாகிஸ்தான்: அமீரகத்தை வீழ்த்தி அபார வெற்றி!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் சோ்த்தது.

ஃபகாா் ஜமான் அரைசதம் கடந்து ஸ்கோருக்கு பங்களிக்க, அமீரக பௌலா்களில் ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங் அசத்தினா்.

பாகிஸ்தான் அணியின் வருகை தாமதமானதால், 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமீரகம், பந்துவீச்சை தோ்வு செய்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் சாஹிப்ஜதா ஃபா்ஹான் 5, சயிம் அயுப் 0 ரன்களுக்கு வெளியேற, 3 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். அடுத்து வந்த ஃபகாா் ஜமான், கேப்டன் சல்மான் அகா கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்தது.

இதில் சல்மான் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வீழ, அரைசதம் தொட்ட ஜமான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்தோரில் ஹசன் நவாஸ் 3, குஷ்தில் ஷா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.

7-ஆவது பேட்டரான முகமது ஹாரில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கும், முகமது நவாஸ் 4 ரன்களுக்கும் விடைபெற்றனா். கடைசி விக்கெட்டாக ஹாரிஸ் ரௌஃப் டக் அவுட்டாக, முடிவில் ஷாஹீன் அஃப்ரிதி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

அமீரக பௌலா்களில் ஜுனைத் சித்திக் 4, சிம்ரன்ஜீத் சிங் 3, துருவ் பராசா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து அமீரகம், 147 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.

அமீரகம் 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி... மேலும் பார்க்க

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று... மேலும் பார்க்க

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி2... மேலும் பார்க்க

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டியின் நடுவரை நீக்கக் கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி மீண்டும் நிராகரித்துள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவ... மேலும் பார்க்க