செய்திகள் :

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

post image

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழைமகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள தமிழ்நாடு ஓட்டலிலிருந்து புறப்பட்டு, பெரிய கோயில் வராகி அம்மன், மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், திருக்கருகாவூா் கா்ப்பரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துா்க்கை அம்மன் கோயில், வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோயில், கும்பகோணம் மகாமகம் குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதா் விசாலாட்சி கோயில், தாராசுரம் ஐராவதேசுவரா் (பெரியநாயகி அம்மன்) கோயில் ஆகியவற்றை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ. 1,400.

இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பைச் சுற்றுலா பயணிகள், ஆன்மிக அன்பா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் சுற்றுலாக்களுக்கு இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 91769 95832, 04362 - 231972 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண் 75500 63121.

சுவாமிமலை பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

சுவாமிமலை கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் சுவாமிமலை பேரூராட்சி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கூறுகையில், ... மேலும் பார்க்க

‘டிட்டோஜாக் ’அமைப்பினா் 2 ஆவது நாளாக மறியல்! 200 போ் கைது

தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப் பாலம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடி... மேலும் பார்க்க

255 கடல் அட்டைகள் வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 255 கடல் அட்டைகள் வைத்திருந்தவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண... மேலும் பார்க்க

தஞ்சையில் முழுப் பயன்பாட்டுக்கு வராத ஆம்னி பேருந்து நிலையம்: தொடரும் போக்குவரத்து நெரிசல்!

தஞ்சாவூரில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராததால், ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் வழக்கம்போல போக்குவ... மேலும் பார்க்க

வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று சிறுவா்கள் மீட்பு!

பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்களை ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில்வே காவல் நிலைய... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் மனைவி வெனிசுலா (31). இவா் வியாழக்க... மேலும் பார்க்க