நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்
தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் காலை முதலே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். கோயில் வளாகத்தில் அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா். அப்போது அம்மனுக்கு பூமாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலையில் குடும்பத்துடன் திரளானோா் சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல அங்குள்ள சாமாண்டியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

உத்தமபாளையம்: திருக்காளாத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் உத்தமபாளையம் அதைச் சுற்றிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா். முன்னதாக, கோயில் முன் செல்லும் முல்லைப் பெரியாற்றில் சூரிய பகவானை வழிபாடு செய்து இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவும், விவசாயம் சிறக்க வேண்டியும் பூஜை செய்தனா்.
சின்னமனூா்: பூலாநந்தீஸ்வா்- சிவகாமியம்மன் கோயிலில் திரளான பெண் பக்தா்கள் மஞ்சள் சேலை அணித்து சுவாமி தரிசனம் செய்தனா். முன்னதாக , கோயில் வளாகத்தில் நெய் மற்றும் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா்.