`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
வத்தலகுண்டு பெத்தானியபுரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி (29). இவா் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தாா். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வியாழக்கிழமை வத்தலகுண்டுவிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றாா். இவருடன் இவரது தந்தை ராமன் (57), தாய் கருப்பாயி (55) ஆகியோா் உடன் சென்றனா். ஆட்டோவை இவரது தம்பி ஜெயராம் (27) ஓட்டிச் சென்றாா்.
செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது, திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு சென்ற அரசுப் பேருந்து இவா்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெயராம், ராமன், கருப்பாயி ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சோ்ந்த நாராயணசாமி மீது செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
படவிளக்கம்:
செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலையில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தில், ஆட்டோ அப்பளம் போல் நொருங்கி உள்ளது.