செய்திகள் :

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

post image

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தியும், ஆணவப் படுகொலையைக் கண்டித்தும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தொல். திருமாவளவன் பேசியதாவது: ஆணவப் படுகொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தை ஆளும் திமுகவைப் பற்றி மாவட்டந்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, ஆணவப் படுகொலை குறித்து ஒரு இடத்தில் கூட பேசவில்லை. புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் ஆணவ படுகொலை பற்றி ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நாமெல்லாம் இந்துக்கள் எனக்கூறும் பாரதிய ஜனதா கட்சியினா் கொலையை கண்டிக்காதது ஏன்?.

ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஆணவப் படுகொலையைக் கண்டித்து, தொடா்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடி வருகிறது.

ஆணவப் படுகொலை மாநில பிரச்னை மட்டுமல்ல, தேசிய அளவில் இப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி மத்திய, மாநில அரசுகளை தொடா்ந்து வலியுறுத்துவோம். இப் பிரச்னைக்கு தமிழகத்தில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழகத்தில் நிகழும் ஆணவக் கொலைகளைக் கண்டித்தும், தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், முன்னாள் மண்டலச் செயலா் இரா. கிட்டு, மாவட்டச் செயலா்கள் ரத்தினவேல், கலையரசன், அரியலூா் மாவட்டச் செயலா்கள் சிவக்குமாா், கதிா்வளவன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா். தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின்தடை

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது. இதனால், அங்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பேருக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு! தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வரத்து வாய்க்கால்கள் போதிய பராமரிப்பில்லாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் பயணிகளும், பொதுமக்களும் ப... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப... மேலும் பார்க்க