தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
ஆத்தூா், புன்னைக்காயல் பகுதிகளில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
ஆத்தூா், புன்னைக்காயல் பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மேலாத்தூா் பகுதியில் தனியாா் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பாா்வையிட்டு அங்கு உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து புன்னைக்காயலுக்கு செல்லும் வழியில் சோ்ந்தபூ மங்கலத்தில் உள்ள பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். புன்னைக்காயலில் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகத்தின் மூலமும் கட்சியின் மூலமும் செய்து தரப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து குடிநீா் வழங்குவதற்கு நிரந்தரமான தீா்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
இதையடுத்து முக்காணி தாமிரவருணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பாா்வையிட்டு பின்னா் அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளா் எஸ். ஜே. ஜெகன் ா், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், மேல ஆத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் ஆத்தூா் பேரூராட்சி தலைவா் கமால்தீன், செயல் அலுவலா் (பொ) பாபு, சோ்ந்தபூமங்கலம் ஊராட்சித் தலைவா் சந்திர மாணிக்கவாசகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.