செய்திகள் :

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

post image

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் பூஜை தட்டுக்களுடன் படிக்கட்டுகளில் சாமி தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்தது.

கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிலிருந்து தப்பிக்கப் போராடினர். ஆனாலும் முடியாமல் அவர்கள் கீழே விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் மயங்கிய நிலையில் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம்
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம்

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீஸார் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டு, கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க தடுப்புகளில் ஏறி குதிக்க முயற்சி செய்தனர்.

சில ஆண்கள் அவர்களைப் பாதுகாப்பாக இழுக்க முயற்சி செய்தனர். சில இடங்களில் பெண்கள் அழுதபடி நின்ற காட்சிகள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

கோயிலில் இருந்து வரும் வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பதைக் காட்டுகின்றன. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அக்கோயிலை தனியார் நிர்வாகம் நடத்தி வருகிறது. ஏகாதசி பண்டிகை குறித்தும், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதும் குறித்தும் கோயில் நிர்வாகம் அரசுக்கோ அல்லது போலீஸாருக்கோ தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் போதிய அளவில் போலீஸார் குவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநில அமைச்சர் அட்சன்நாயுடு நேரில் சென்று மீட்புப்பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 ம... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு; ஆறுதல் சொன்ன விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல்படுத்தினார... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? - போலீஸ் சொல்வது என்ன?

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று அதிகாலையில் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் பஸ்சில் இருந்து ஜன்னல் ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: நீதிமன்றத்தில் சிபிஐ ஆவணங்கள் தாக்கல் - நகல் கேட்டு தவெக-வினர் மனு!

கரூரில் கடந்த மாதம் 27 - ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வெளியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்

தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எர... மேலும் பார்க்க

ஆந்திரா: அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 15 பேர் பலி; பயணிகளின் நிலை என்ன?

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூலில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது ம... மேலும் பார்க்க