பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
ஆம்பூா் கோயில்களில் சிவராத்திரி
ஆம்பூா் பகுதி கோயில்களில் சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு கால பூஜைகள், லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா மெளனகுரு மடம், எஸ்.கே. ரோடு காளிகாம்பாள் உடனுறை கமண்டீஸ்வரா் கோயில், சின்னகொம்மேஸ்வரம் காசி விஸ்வநாதா் கோயில், குமாரமங்கலம் மங்கலநாயகி உடனுறை மங்கல ஈஸ்வரா் கோயில், மாதனூா் ஆத்மநாத ஈஸ்வரா் கோயில், வடச்சேரி சுந்தரேஸ்வரா் கோயில்களில் சிவராத்திரி விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் இரவு முழுவதும் நடந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.