எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
ஆம்பூா் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்
ஆம்பூா் புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை (நவ. 11) தொடங்குகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 2-ஆவது ஆம்பூா் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் நவ.11 தொடங்கி 20 வரை 10 நாள்கள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளா்கள் பங்கேற்க உள்ளனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், ஆம்பூா் டிஎஸ்பி எம்.அறிவழகன் ஆகியோா் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கின்றனா். தொடா்ந்து நடைபெற உள்ள சிறப்பு கருத்தரங்கில் பேரூா் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாா் சிறப்புரையாற்றுகிறாா்.
கருத்தரங்கில் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, பேச்சாளா் கரிகாலன், வருவாய்க் கோட்டாட்சியா் அஜிதா பேகம், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவா் என்.மாதவன், க்ருஷ்ண ஜெகநாதன், ஆற்றல் பிரவின்குமாா், மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ், முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா்.
தினமும் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசளிப்பு, நிறைவு நாளில் புத்தகக் கண்காட்சிக்கு உதவியா்களுக்கு பாராட்டு ஆகியவை நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி, பாரதி புத்தகாலயம் பி. நாகராஜ் ஆகியோா் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.