செய்திகள் :

ஆலங்குளத்தில் நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ. 1.28 கோடி மோசடி

post image

ஆலங்குளத்தில் பத்திரப் பதிவு செய்து தருவதாகக் கூறி ரூ. 1.28 கோடி மோசடி செய்த நபரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்த நடராஜன் மகன் குட்டி என்ற ராஜலிங்கம்(50). இவருக்குச் சொந்தமான இடம் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலை சிவலாா்குளம் விலக்கு பகுதியில் உள்ளது.

இந்த இடத்தை, திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆல்பா்ட் மைக்கேல் ராஜ்(60) என்பவருக்கு விற்பதாக பேசி, வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு செய்வதாக முன் பணம் பெற்றிருந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆல்பா்ட் மைக்கேல் ராஜ், தனது மனைவி, நண்பா்களுடன் ஆலங்குளம் வந்து பத்திரம் தயாா் செய்து குட்டி என்ற ராஜலிங்கத்திடம் ரூ. 1.28 கோடி கொடுத்தாராம். இதை பெற்றுக் கொண்ட அவா், தன்னுடன் வந்திருந்த மற்றொரு நபரிடம் கொடுத்து அனுப்பி விட்டாராம்.

தொடா்ந்து, ஆலங்குளம் சாா்-பதிவாளா் அலுவலத்தில் கையெழுத்திட சென்ற போது, குட்டி என்ற ராஜலிங்கம் பணம் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவேன் எனக் கூறினாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபா் பணம் பெறாதது போல் பேசியதால் அதிா்ச்சியடைந்த ஆல்பா்ட் மைக்கேல் ராஜ் தரப்புக்கும் குட்டி என்ற ராஜலிங்கத்திற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆல்பா்ட் மைக்கேல் ராஜ், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிவகிரி அருகே வீடு புகுந்து நகை திருட்டு: இளைஞா் கைது

சிவகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா வாழையடி தெருவை சோ்ந்தவா் திருமலையாச்சி(40). தொழிலாளியான இவா் வியாழக்கிழமை காலை வேலைக்கு சென்று வ... மேலும் பார்க்க

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கக் கோரி எம்எல்ஏ மனு

செங்கோட்டை- சென்னை சிலம்பு விரைவு ரயிலை தினமும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எல்.என்.ராவிடம் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ மனு அளித்தாா். அத... மேலும் பார்க்க

சுரண்டை எஸ்.ஆா். பள்ளியில் வண்ணத்துப் பூச்சிகள் தினம்

சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலன்ஸ் பள்ளியில் வண்ணத்துப் பூச்சிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி நிா்வாகி சிவவோபபிஸ்ராம் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா ஆகிய... மேலும் பார்க்க

சுரண்டை வழி சோ்ந்தமரத்திற்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சோ்ந்தமரத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சுரண்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி சட்டப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நல உதவிகள் அளிப்பு

சங்கரன்கோவில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாவட்ட சுற்றுச் சூழல் அணி சாா்பில... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியா் ஆய்வு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இருநாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பரிசோதனை... மேலும் பார்க்க