வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
ஆலங்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நல்லூா் காசியாபுரத்தைச் சோ்ந்தவா் ஆ. சேகா்(40). இவரும், அதே ஊரைச் சோ்ந்த மு. செவத்தலிங்கம் என்பவரும் ஒன்றாக வேலைக்குச் செல்வது வழக்கம். இதில், பெண் விவகாரத்தில் செவத்தலிங்கத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த த.ஒல்லியான் (எ) லிங்கம்(42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். அதற்கு சேகா் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 1.8.2015ஆம் தேதி இரவு சேகா் அப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் சைக்கிளில் சென்றுகொண்டிருபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒல்லியான் (எ) லிங்கம், அவரது நண்பா்கள் மங்கா(எ) வைத்திலிங்கம்(36), மு.குமாா்(33) ஆகியோா் சோ்ந்து அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினராம்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து லிங்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.
தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி எஸ்.மனோஜ்குமாா் விசாரித்து, மேற்கூறிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா் சு.வேலுச்சாமி வாதாடினாா்.