பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை #VikatanPhotoCards
ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆல்பம் பாடல்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது, சூர்யாவின் கருப்பு, கைதி - 2, மார்ஷல் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், திரைப்படத் தயாரிப்பைத் தாண்டி ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: லோக சுந்தரன்! வைரலான மோகன்லாலின் விளம்பர விடியோ!
அதன் முதல் பாடலாக, ‘கனவே’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், ரத்னம், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் நடித்த நடிகர் கேகே மற்றும் அறிமுக நடிகை ஹிதா அரன் நடித்துள்ளனர். கேகே இயக்கிய இப்பாடலுக்கு ஐசக் ஃபிலிப் இசையமைக்க ராஜ் ரிஸ், விஷு மயா இணைந்து பாடியுள்ளனர்.