திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் ஆஸ்திரேய வீரர் டேவிட் பூனுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், ஐசிசி நடுவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பெரிய மீசைக்கு பிரபலமானவரான 64 வயதான டேவிட் பூன் ஆஸ்திரேலிய அணிக்காக 107 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்தத் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் மைக் பேர்ட் கூறுகையில், “டேவிட் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அவரின் அனுபவம் அணிக்கு மிக முக்கியப் பங்களிக்கும்” என்றார்.
1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் பூன், 2000 ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக அணித் தேர்வாளராக இருந்து வருகிறார். மேலும், 2011 ஆம் ஆண்டு ஐசிசியின் நடுவராக இணைந்தார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் டாஸ்மேனியா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராகவும், 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய அணியுடன் இணைந்த பந்துவீச்சு பயிற்சியாளர்..! தீவிர பயிற்சியில் வீரர்கள்!