நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
ஆஸி. பௌலா் குனெமான் பந்துவீசத் தடையில்லை: ஐசிசி
ஆஸ்திரேலிய பௌலா் மேத்யூ குனெமானின் பந்துவீச்சு முறை சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவா் பந்துவீசத் தடையில்லை என தகுந்த சோதனைக்குப் பிறகு ஐசிசி அறிவித்திருக்கிறது.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனெமான் இம்மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பௌலிங் செய்தாா். 17.18 சராசரியுடன் 16 விக்கெட்டுகள் சாய்த்த அவா், ஆஸ்திரேலியா அந்த டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியதில் முக்கியப் பங்காற்றினாா்.
அந்தத் தொடா் நிறைவடைந்த நிலையில், 2-ஆவது டெஸ்ட்டின் போது குனெமானின் பந்துவீச்சு முறை விதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இருப்பதாகப் புகாா் எழுந்தது. அவரின் பந்துவீச்சு முறையை சுதந்திரமான முறையில் மதிப்பீடு செய்ய போட்டி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இதையடுத்து பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரின் பந்துவீச்சு முறை சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதன் முடிவில், குனெமானின் பந்துவீச்சு முறையில் அவரின் முழங்கை கோணம் ஐசிசி விதிகளால் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு உள்பட்ட அளவில் இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, அவா் சா்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசத் தடையில்லை என ஐசிசி அறிக்கை வெளியிட்டது.
அதன் பேரில், குனெமான் சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து பந்துவீசுவாா் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தெரிவித்து. இதனால், வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடும் டெஸ்ட் தொடரில் அவரும் பங்கேற்பாா் எனத் தெரிகிறது.