செய்திகள் :

ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

post image

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்பாபு புறக்கணித்திருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 09.11.2025 அன்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்து சென்னை மண்டல மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தலைமையில் 13.11.2025 அன்று நடைபெற்றது. தியாகராய நகரிலுள்ள ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைநகரிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பங்கேற்பார்கள் எனச் சொல்லப்பட்டது.

எஸ்.ஐ.ஆர் ஆலோசனை கூட்டம்

அதன்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மா.செ-க்கள் மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி. சேகர், சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு வருவதாகச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க புள்ளிகள் சிலர், “வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராடிவருகிறது. இச்சூழலில் களத்தில் எப்படி கையாள்வது என்பது குறித்து மண்டல பொறுப்பாளர்கள் தலைமையில் மா.செ-க்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தைக் நடத்த முதல்வர் ஆணையிட்டிருந்தார். ஆனால் கூட்டம் ஆ.ராசா தலைமையில் நடப்பதாலேயே அமைச்சர் சேகர்பாபு அதில் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கும் வரை ‘பி.கே.எஸ்’ வந்துவிடுவார் எனக் கூட்ட அரங்கில் பேசிக்கொண்டிருந்தனர்; ஆனால் அவர் வரவேயில்லை” என்றனர்.

சேகர்பாபு
சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன பிரச்னை என விசாரித்தபோது, நம்மிடம் பேசியவர்கள், “தலைநகர் தொகுதியிலுள்ள தனித்தொகுதிகளை யாருக்கு தர வேண்டும் என ஆலோசனையின்போது ஆ.ராசாவுக்கும் சேகர்பாபுவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சீனியரான ஆ.ராசாவைப் அமைச்சர் அவமரியாதையாகப் பேசியதாகவே முணுமுணுக்கப்பட்டது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் பேசிக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஆ.ராசா தலைமையில் நடந்த, SIR குறித்தான மிக முக்கியமான கூட்த்தில் சேகர்பாபு பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில் நடந்தவற்றை அடிமட்ட நிர்வாகிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். சேகர்பாபு பங்கேற்காததால் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கு செயல்திட்டங்கள் எப்படி சென்றடையும்? தேர்தல் நெருங்கும் சூழலில் மாவட்டச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான இருவரும் ஈகோ யுத்தத்தில் இறங்கியிருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈகோ யுத்தத்தை முதல்வர்தான் முடித்துவைக்க வேண்டும்” என்றனர்.

மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குத... மேலும் பார்க்க

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச... மேலும் பார்க்க

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்கா... மேலும் பார்க்க

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டு... மேலும் பார்க்க

'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். ... மேலும் பார்க்க

``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.தவெக வை அதிமு... மேலும் பார்க்க