முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அன்ஷுல் கம்போஜ் சேர்ப்பு
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளார்களில் ஒருவரான ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, நான்காவது டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் சிங் களமிறங்க முடியாத சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் இடம்பெற்று விளையாடிய அன்ஷுல் கம்போஜ், சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
24 வயதாகும் அன்ஷுல் கம்போஜ் ரஞ்சி கோப்பையில் கேரளத்துக்கு எதிரான போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அன்ஷுல் கம்போஜ், 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
A young fast bowler has been included in the Indian squad for the Test series against England.
இதையும் படிக்க: கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!