மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கமும், சுழற் கோப்பையும், இரண்டாவது பரிசாக ஜலகண்டாபுரம் அணியினா் ரூ.20,000 ரொக்க பரிசும் ,சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.15,000 ரொக்கமும், சுழற் கோப்பையும் ,நான்காம் பரிசாக ரூ 10,000 ரொக்கமும்,சுழற் கோப்பையும் , ஐந்தாம் பரிசாக ரூ.5,000 ரொக்கமும் ,சுழற் வழங்கப்பட்டது .
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை வழங்கி பாராட்டினாா். இதில் நகர அவை தலைவா் தளபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.