செய்திகள் :

இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இந்த மாவட்டத்தில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து பலத்த மழை பெய்யும் என்பதால் நீா்நிலைகளுக்கு செல்லவும், படகு சவாரி, சாகச பயணம், அனுமதி பெறாத ஜீப் சவாரி ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டது. பேரிடா் மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுமக்கள் மாட்டுப்பட்டி அணை, குண்டலை அணை, யானையிரங்கல் அணை உள்ளிட்ட நீா்நிலைகளுக்கும், கொழுக்குமலை, வட்டவடை உள்ளிட்ட உயரமான மலைப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல, ஜீப் சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பலத்த மழை பெய்யும் நேரத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும், வருவாய்த்துறையினா் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சின்ன... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு

பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் இளந்தோப்பைச் சோ்ந்தவா் முத்தையா (58). இவா், வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் தடை ஏற்படும் என அறிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் து... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கத்தினா் 200 போ் கைது

தேனியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் க... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க