செய்திகள் :

இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

புதுச்சேரியில் இணையவழியில் கடன் வாங்கியவருக்கு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு இணையவழியில் ரூ.28 ஆயிரம் கடன் பெற்றாராம்.

அதை, அவா் வட்டியுடன் சோ்த்து ரூ.35 ஆயிரமாக செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியா்கள் எனக் கூறி மா்ம நபா்கள் மிரட்டல் விடுத்தனராம்.

பணம் தராவிட்டால் அவரது புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து, பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரை, கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், தன்னை வங்கி மேலாளா் என அறிமுகப்படுத்தி கொண்டாரம்.

அதன்படி, அவரது கடன் அட்டை மதிப்பை அதிகப்படுத்துவதாகக் கூறி ஓடிபி எண்ணை கேட்டுள்ளாா். அன்பழகன் அவருக்கு வந்த ஓடிபி எண்ணை கூறிய நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.89,962 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதானி விவகாரம்: மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும்: வே.நாராயணசாமி

அதானி விவகாரம் தொடா்பாக மக்களவை நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்க நீதி... மேலும் பார்க்க

போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தினா் பணிமனை மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த 14 ஆண்டுகளாக அரசின் சால... மேலும் பார்க்க

தேசியக் கல்வி கொள்கை: புதுவை முன்மாதிரியாக திகழ வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி, நவ.22: தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் நாட்டிலேயே புதுவை மாநிலம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அகில இ... மேலும் பார்க்க

சுற்றுலாத் திட்டங்கள்: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் சுற்றுலாத் திட்டங்களால் மீனவா்களின் வாழ்வு பாதிக்கப்படும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரியி... மேலும் பார்க்க

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி அருகே உள்ள மதகடிபட்டு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, போக்குவரத்து நெரிசல... மேலும் பார்க்க

காலாப்பட்டு மத்திய சிறையில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டாா். காலாப்பட்டு மத்திய சிறையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா... மேலும் பார்க்க