"ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம்" - தெலங்கானா CM ரேவ...
"இதனால்தான் நடிப்பதில்லை; சினிமாவில் நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்" -ரோஜா நெகிழ்ச்சி
12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆந்திர மாநில ஜெகன் மோகன் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
தற்போது அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் `லெனின் பாண்டியன்' படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா.
இவர் இப்படத்தில் 'சந்தானம்' என்கிற வயதான முதியவர் கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் ரோஜா, "ரொம்ப வருஷத்துக்குப் பிறகு சினிமா நிகழ்ச்சிகளில் பேசுவதும் சந்தோஷமாக இருக்கு. மீண்டும் சினிமாவில் முதல் படம் நடிப்பது போல இருக்கு.
அரசியலில் பிஸியாக இருந்து கொண்டு சினிமாவில் நடித்தால் என்னால் தேதிகள் மாற்றம், தாமதம் ஏற்படும் என்பதால் நடிக்கமாலே இருந்தேன்.
சுப்புசார் இந்தப் படத்தில் நடிக்கச் சொல்லி கேட்டபோது, 'வேண்டாம் சார் நான் அரசியலில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். இப்போ நடிக்கிறது இல்ல'னு சொல்லிட்டேன்.
அவர், 'கதையைக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க'னு சொன்னார். கதையை கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டதால் இந்தப் படத்தில் நடித்தேன்.
கங்கை அமரன் சாரும் நானும் ஜோடியாக நடித்திருக்கிறோம்.
கங்கை அமரன் சார் அடிக்கடி, 'நா உங்களோட பெரிய ரசிகன்'னு சொல்லிட்டு, பாட்டு பாடிட்டே இருப்பார். சிவாஜி சார் பேரன் தர்ஷன் கணேஷ் பெரிய குடும்பத்தில் இருந்து வந்த எண்ணமில்லாமல், தன்னடக்கத்துடன் இருந்தார்.

எல்லாரும் தனித்தனியாக கேரவனில் உட்கார்ந்து இருக்காமல், ஒன்றாக சேர்ந்து உரையாடி நடித்திருக்கிறோம். அதனால், இப்படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு.
இந்தப் படம் மூலமாக எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் நிச்சயம் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வருவேனு நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.















